இன்றைய காலகட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை எழுதி முடித்தவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று தெரியாமல் யோசித்து கொண்டு குழம்பி விடுகின்றனர். பெரும்பாலானவர்கள் இன்ஜினியரிங் அல்லது மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். மற்ற துறைகளை பற்றி அவர்கள் யோசிப்பதும் கிடையாது அதைப்பற்றி தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. ஒருவேளை அந்த இரண்டு துறைகளிலும் இடம் கிடைக்காதவர்கள் சிலர் வேறு வழியின்றி கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு வந்து சேர்கின்றனர். இன்னும் வேறு சிலரோ அந்த ஆண்டு கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்கவும் செய்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு வருட படிப்பை இழந்து விடுகின்றனர். மேலும்ஒரு சிலர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்கை கட்டணத்தை கட்டிவிட்டு சிலநாட்கள் செல்வார்கள் அந்த சமயத்தில் நுழைவு தேர்வு முடிவு வந்து அவருக்கு கவுன்சிலிங் அழைத்திருப்பார்கள். அப்போது வந்து அதிலும் கலந்து கொண்டு அவருக்கு இடமும் கிடைத்துவிடும். அப்போதுஅவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்க கேட்கும்போது சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. அப்போது அவர்கள் அந்த கல்லூரியில் இருந்து விலகி கவுன்சிலிங் மூலம் கிடைத்த கல்லூரியில் சேர முற்படும் போது கல்லூரி நிர்வாகம் அதற்க்கு அனுமதி அளிப்பதில்லை. அப்படியே போராடி சான்றிதழ்களை பெற்றாலும் அதற்குள் கவுன்சிலிங் சேர்க்கையே முடிந்துவிடும். அப்போது அவர்கள் அந்த கல்லூரிக்கும் செல்ல முடியாது, அதேசமயத்தில்அந்த ஆண்டு சேர்க்கையே முடிந்திருக்கும். அப்போது ஒரு வருடம் வீணாக கழிக்க வேண்டிவரும். அதனால் தெளிவான முடிவோடு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ள பல கலை மற்றும் அறிவியல் துறைகள் உள்ளன அவற்றை தேர்ந்தெடுத்து படித்தாலே போதுமானது. இதன் பொருட்டு இங்கே அதிக வேலைவாய்ப்புகள் உள்ள புள்ளியியல் துறை சார்ந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
புள்ளியியல் துறை வேலைவாய்ப்புகள்:
இந்தியன்
புள்ளியியல் சேவை - ஐ.ஏ.எஸ்
படிப்புக்கு இணையான மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன்
நடத்தும் இந்தியன் புள்ளியியல் சேவைக்கான
(ISS
- Indian statistical service) தேர்வில் வெற்றி பெற்றால் இந்த வேலையில்
சேரலாம்.
தொகுதி
சுகாதார புள்ளியலாளர் – இந்த வேலையில் (Block Health Statistician) தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட ஊர்களில் உள்ள கல்லூரிகளில்
சேர்ந்து புள்ளியியலை படிக்கலாம்.
தமிழ்நாட்டில்இளநிலை புள்ளியல் துறை உள்ள கல்லூரிகள்
- ஏ. வி. வி. எம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, பூண்டி, தஞ்சை மாவட்டம்.
- சி.பி.எம் கல்லூரி, கோயம்புத்தூர்.
- அரசு கலை கல்லூரி, தருமபுரி.
- அரசு கலை கல்லூரி, சேலம்.
- அரசு கலை கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்.
- லயோலா கல்லூரி (தன்னாட்சி), சென்னை.
- மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி(தன்னாட்சி), சென்னை.
- பி.எஸ்.ஜி கலை மற்றும்அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர்.
- ஈ.வே.ரா. பெரியார் கல்லூரி(தன்னாட்சி), திருச்சி.
- பிரசிடென்சி கல்லூரி (தன்னாட்சி), சென்னை.
- ராஜா சரபோஜி அரசு கலை கல்லூரி, தஞ்சாவூர்.
- எஸ்.டி.என் பட் வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, சென்னை.
- சௌடேஸ்வரி கல்லூரி, சேலம்.
- ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சேலம்
- செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி
- ஜி வேங்கடசுவமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி.
- அரசு கலை கல்லூரி (தன்னாட்சி),கரூர்.
- கிருஷ்ணசாமி அறிவியல், கலை மற்றும்மேலாண்மை கல்லூரி, கடலூர்.
- டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லூரி, சென்னை.
- அறிஞ்சர் அண்ணா அரசு கலை கல்லூரி, நாமக்கல்.
- பெரியார் கலை கல்லூரி, கடலூர்.
- அரசு கலை கல்லூரி உடுமலைபேட்டை, திருப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக